வட, கிழக்கு உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

வட, கிழக்கு உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

வடக்கு- கிழக்கு உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டும். தங்களுக்குள்ளே இருக்கின்ற சிறிய சிறிய வேற்றுமைகள், தனிப்பட்ட கோபதாபங்கள் மற்றும் ஏனைய முரண்நிலைகளை மறந்து இனமாகச் சிந்தித்துச் சபைகளில் ஆட்சி அமைப்பதன் மூலம் மீண்டுமொரு தமிழ்த்தேசிய எழுச்சியை தமிழ்த்தேசியக் கட்சிகள் ஏற்படுத்த வேண்டுமெனப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு.வேலன் சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நல்லூரில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு- கிழக்குத் தமிழர் தாயகத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கே மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்துள்ளனர். கடந்த வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியத்தை விட்டு மக்கள் விலகி வாக்களித்ததாக ஒரு தோற்றப்பாடு காட்டப்பட்டாலும் இம்முறை உள்ளுராட்சிசபைத் தேர்தலில் அந்தத் தோற்றப்பாடு களையப்பட்டிருக்கிறது. இம் முறை உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வட- கிழக்கு மக்கள் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு எழுச்சியாக வாக்களித்தமை மிகவும் பாராட்டுதற்குரியது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )