கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்; உறுதிப்படுத்தினார் சபாநாயகர்!

கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்; உறுதிப்படுத்தினார் சபாநாயகர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அருகிலுள்ள நாட்டில் தங்கியிருக்கும் அவர், புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதத்தை நாளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான எழுத்துப்பூர்வ கோரிக்கையை இதுவரை தன்னிடம் சமர்ப்பிக்கவில்லை எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )