
இலங்கைக்கு இந்தியா படைகளை தரையிறக்கம்; இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை!
இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் ஊடக செய்திகளை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுதொடர்பில் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் ருவிட்டர் பதிவில்,
ஜனநாயக வழிமுறைகள் மற்றும் விழுமியங்கள், நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை நனவாக்க முயலும் இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கிறது என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இன்று தெளிவாகக் கூறினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

