கிண்ணியா கூட்டத்தில் ஒரு நிமிடமே பேசிய நாமல்!

கிண்ணியா கூட்டத்தில் ஒரு நிமிடமே பேசிய நாமல்!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரங்களுக்காக திருகோணமலை கிண்ணியாவிற்கு சென்ற பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் எம்.பி.யுமான நாமல் ராஜபக்ஸ சுமார் ஒரு நிமிடம் மாத்திரமே உரையாற்றி விட்டு, திடீரென மேடையை விட்டு இறங்கிச் சென்றமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மூதூர் தொகுதிக்கான உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திற்கு சென்ற நிலையிலேயே அவர் இவ்வாறு திடீரென மேடையிலிருந்து இறங்கிச்சென்றுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளர் இப்ராஹிம் சதாத் தலைமையில், நேற்று வியாழக்கிழமை கிண்ணியா பிரதேச சபை கேட்போர் கூடத்தில், நடைபெற்றது.இங்கு சுமார் ஒரு நிமிடம் மாத்திரமுமே உரையாற்றிய நாமல், கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளரிடம் ஏதோ பேசிவிட்டு, திடீரென மேடையை விட்டு இறங்கிச் சென்றதைக் காண முடிந்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )