வவுனியாவில் தனிச் சிங்களத்தில் அநுர தரப்பு வேட்புமனு தாக்கல்..!

வவுனியாவில் தனிச் சிங்களத்தில் அநுர தரப்பு வேட்புமனு தாக்கல்..!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்பு மனுப்பத்திரங்கள் தனிச் சிங்களத்தில் பூரணப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக பலரும் விசனமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கையளிக்கும் பணி தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி, வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்பு மனுவினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வேட்புமனுப்பத்திரங்கள் அனைத்தும் சிங்கள மொழியில் மாத்திரம் பூரணப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பலரும் விசனமடைந்துள்ளனர்.

குறிப்பாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் வேட்புமனு பத்திரமும் தனிச்சிங்கள மொழியில் மாத்திரமே பூரணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )