
தமிழ்ப் பெண்ணை தமிழ் முறைப்படி கரம் பிடித்த பிரான்ஸ் இளைஞர்
தமிழகம் – சேலத்தை சேர்ந்த பெண் ஒருவரும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த கந்தசாமி- சுகந்தி தம்பதியரின் மூத்த மகள் கிருத்திகா. பொறியியலாளரான இவர் சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் உடன் பணிபுரிந்த பிரான்ஸை சேர்ந்த பென்னடி – அட்மா ஊஜேடி தம்பதியரின் மகனான பொறியாளர் ஆசானே ஒச்சோயிட் என்ற இளைஞருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
இதுகுறித்து பெண் பொறியியலாளர் கிருத்திகா, தனது பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதத்தை பெற்றுள்ளார். ஆசானே ஒச்சோயிட் குடும்பத்தினரும் திருமணத்தை தமிழகத்திலேயே பாரம்பரிய முறைப்படி நடத்திட சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழ் முறைபடி திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது. தமிழர் பாரம்பரிய முறைப்படி அர்ச்சகர்கள் வேதம் ஓத இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
அதன்படி கிருத்திகாவுக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார் ஆசானே. இந்த திருமணத்தில் இரண்டு குடும்பத்தினரும், பட்டுவேட்டி, பட்டுசேலையில் இருந்தனர்.