இந்தியாவில் தங்கம் வென்ற மாங்குளம் பெண்ணிற்கு கிடைத்த கௌரவம்

இந்தியாவில் தங்கம் வென்ற மாங்குளம் பெண்ணிற்கு கிடைத்த கௌரவம்

கடந்த 27 அன்று இந்தியாவில் நடைபெற்ற மிக்ஸ் பாக்சின்கில் தற்காப்பு கலை போட்டியில் இந்தியாவில் தங்கம் வென்ற மாங்குளத்தை நேர்ந்த ஜெகதீஸ்வரன் விஜிதாவிற்கு கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு நேற்றைய தினம் வருகை தந்திருந்த நிலையில் அவர்களுக்கு மாங்குளம் மண்ணில் பெரும் கௌரவிப்பு நேற்று மாலை இடம்பெற்றிருந்தது.

மாங்குளம் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து கௌரவிப்பு நிகழ்வு ஆரம்பமாகி மாங்குளம் சந்தி வரை வீதி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட விஜிதா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் கழக வீரர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )