
இலங்கைக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
ரி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை வந்தடைந்துள்ளது.
இவர்கள் இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையில் 3 ரி20 போட்டிகளும், 3 ஒருநாள் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
ரி20 போட்டித் தொடரின் முதலாவது போட்டி ஜூன் 23ஆம் திகதி தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஜூலை 1ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.