கொக்குத்தொடுவாய் 6ம் நாள் அகழ்வுப் பணி; 7 உடல் பாகங்கள்,  மனித ஆடைகள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் 6ம் நாள் அகழ்வுப் பணி; 7 உடல் பாகங்கள், மனித ஆடைகள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணியின் மூன்றாம் கட்டத்தில் ஆறாம் நாள் அகழ்வு புதன்கிழமை (10) இடம்பெற்றது.

குறித்த அகழ்வின் போது பார்வையாளராக 10ஆம் திகதி புதன்கிழமையும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான அதிகாரி லூடியானா செல்றினி அகிலன் அவர்களும் இந்த அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்திருந்தார். 

இந்த அகழ்வு பணியின் போது 09, 10 ஆம் திகதிகளில் 7 மனித உடல் பாகங்கள் ,சில மனித ஆடைகள் மற்றும் இராணுவத்தால் பாவிக்கப்படும் கம்பி மேலும் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆடைகளில் பெண்களுக்குரிய உள் ஆடைகள் காணப்படுகின்றது தொடர்பான மேலதிக ஆய்வுகள் நாளை நடைபெற இருக்கின்றது.

புதன்கிழமை (10) அகழ்வ பணிகளை பேராசிரியர் சோமதேவா குழுவினர் மேற்கொண்டனர் அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா தடயவியல் பொலிஸாசார் உள்ளிட்ட தரப்பினரும் இந்த ஆய்வுகளில் பங்கேற்றிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )