
ஆள் கடத்தலுக்கு 5-10 வருட சிறை
மனித கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனையும் இரண்டு மில்லியன் ரூபா வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய குடிவரவு சட்டமூலத்தின் கீழ் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மற்றும் இலங்கைக்கு வெளியே ஆட்களை கடத்துபவர்களுக்கு எதிரான கடுமையான தண்டனைகளை இந்த சட்டமூலம் வலியுறுத்துகின்றது.
நிதி அல்லது பொருள் ஆதாயத்திற்காக பிரஜைகள் அல்லாதவர்களை இலங்கைக்கு கடத்துபவர்கள், சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட எந்தவொரு நபருக்கு தெரிந்தே அடைக்கலம் கொடுத்தல், மறைத்து வைத்தல் மற்றும் தெரிந்தே அத்தகைய நபர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு அபராதம் பொருந்தும்.
அத்தகைய நபர்கள் அனைவரும் மனிதக் கடத்தல் குற்றத்தைச் செய்ததாக கருதப்படுகின்றனர்
நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் முதல் இருபது ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை மற்றும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும்.
இலங்கையில் இருந்து பொருள் அல்லது நிதி ஆதாயத்திற்காக ஆட்களை கடத்துவதற்கு ஏற்பாடு செய்தவர்கள், அந்நாட்டின் சட்டங்களை மீறி வேறொரு நாட்டிற்குள் நுழைவதற்கு வசதி செய்தவர்கள் மற்றும் வெளிநாட்டில் அத்தகைய நபர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களுக்கும் அதே தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
போலியான வாக்குறுதிகளை அளித்து அல்லது தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதி அல்லது பொருள் ஆதாயங்களைப் பெறுவதற்காக ஆட்களை ஆட்சேர்ப்பு செய்வதில் ஈடுபடுபவர்களும் இலங்கையை விட்டு வேறு நாட்டிற்குச் செல்லும்படி மக்களைத் தூண்டும் வகையில் மனிதக் கடத்தல் குற்றத்தைச் செய்கிறார்கள்.
அவர்களுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகளுக்கு குறையாத மற்றும் பத்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படுவார்கள்.
எவ்வாறாயினும், சிறுவர் தொடர்பாக குற்றம் இழைக்கப்பட்டிருந்தால், குற்றவாளிகளுக்கு எட்டு முதல் இருபது ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் இரண்டு மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.