வவுனியா சிறுமியின் இறுதி நிமிடங்கள்; பிரதே பரிசோதனை முடிவு வெளியானது

வவுனியா சிறுமியின் இறுதி நிமிடங்கள்; பிரதே பரிசோதனை முடிவு வெளியானது

வவுனியா கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ராசேந்திரன் யதுர்சியின் மரணம் நீரில் மூழ்கி மூச்சு திணறலால் ஏற்பட்டது என பிரதே பரிசோதனை முடிவு தெரிவிக்கிறது.

கணேசபுரம் பகுதியில் பராமரிப்பற்ற கிணற்றிலிருந்து (30) இரவு 9.30 மணியளவில் 16 வயதுடைய சிறுமி யதுர்சி சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமியின் மரணத்தில் காவல்துறையினருக்கு சந்தேகம் நிலவியதையடுத்து சிறுமியின் சடலம் பிரதே பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், (01) சட்ட வைத்திய அதிகாரியினால் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ் உடற்கூற்று பரிசோதனை தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுஜன் தெரிவிக்கையில், சிறுமி உடற்பகுதிக்குள் அதிகளவில் நீர் சென்றமையினால் மூச்சுதிணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதுடன் சிறுமியின் உடலில் எவ்வித காயங்களோ அல்லது எவ்வித தடயங்களோ காணப்படவில்லை எனத் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )