வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகளே ரணிலின் குறி

வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகளே ரணிலின் குறி

பொதுத் தேர்தலுக்கு முதலில் சென்றால் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரின் வாக்குகள் பிரிக்கப்படும் என்பதால் ஜனாதிபதித் தேர்தலில் அந்த வாக்குகளைச் சேகரிப்பது மிகவும் கடினமாக இருக்கும் எனவும் எனவேதான் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கும் அவருக்கு நெருக்கமான சகாக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவதன் நன்மையையும் பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதன் பாதகத்தையும் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளதாகவும் முதலாவது தேர்தல் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தன்னுடைய ஒவ்வொரு சந்திப்பிலும் பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தினாலும் நான் முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல தீர்மானித்துள்ளேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் சிறுபான்மையினரின் வாக்குகளில்தான் மிகப் பெரிய நன்மை உள்ளது. அங்குதான் ஜனாதிபதித் தேர்தலில் அதிக நன்மைகளைப் பெற முடியும். பொதுத் தேர்தலுக்கு முன் சென்றால், இந்த சிறுபான்மை வாக்குகள் பிரிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது சிறு சிறு கட்சிகள் உருவாகி அந்த வாக்குகள் சிதறிய நிலையில் காணப்படுகின்றன. நான் மீண்டும் அவ்வாறு செய்தால், ஜனாதிபதித் தேர்தலில் அந்த வாக்குகளைச் சேகரிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும். எனவேதான் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்த தீர்மானித்துள்ளேன் என தனது சகாக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

எனவே முதலில் பொதுத் தேர்தலை நடத்துவதால் அதனால் எங்களுக்கு எந்த நன்மையும் இல்லையெனவும் தனது சகாக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )