வவுனியாவில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்றது.

இந்த போராட்டம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் போராட்ட இல்லத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 2645ஆவது நாளாக போராடி வரும் உறவுகள் இனப்படுகொலைக்கும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் நீதி கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கண்ணீர்மல்க தமது ஆதங்கங்களையும் வெளிப்படுத்தினர். 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )