சிங்கள மயமாகிறது முல்லைத்தீவு மாவட்டம்; தமிழ் அரசியல்வாதிகள் மெளனம்

சிங்கள மயமாகிறது முல்லைத்தீவு மாவட்டம்; தமிழ் அரசியல்வாதிகள் மெளனம்

முல்லைத்தீவு மாவட்டம் கண்முன்னால் சிஙகளமயமாக்கப்படும் நிலையில், தமிழ் அரசியல்வாதிகளின் மௌனம் கவலையளிக்கின்றது. மகாவலி என்ற பெயரில் நிலங்கள் விழுங்கப்படுவதை இனியும் பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றீர்களா?

மேற்கண்டவாறு வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக முல்லைத்தீவு மாவட்ட மக்களால் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின்போது சு.கங்கம்மா என்ற பாதிக்கப்பட்ட பெண் கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்த தாவது,

மகாவலி அதிகார சபையின் பெயரால் எங்களுடைய பூர்வீக நிலங்கள் சிங்கள மக்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்படுகின்றது. போர் முடிந்து 14 வருடங்கள் கடந்துள்ளபோதும் எங்களுடைய நிலத்தில் ஒரு துண்டு நிலத்தையேயும் எங்களால் மீட்க முடியவில்லை.

3 கிராமங்களையும், 6 கிராமசேவகர் பிரிவுகளையும் கொண்ட கொக்குத்தொடுவாய் கிராமத்தில் வாழ்ந்த மக்களுக்கு பரந்துபட்ட விவசாய நிலங்கள் இருந்தன. 1984ம் ஆண்டு திட்டமிட்டு எங்களை எங்கள் வாழ்நிலத்திலிருந்து வெளியேற்றினார்கள்.

புலிகளை அழித்துவிட்டு 3 நாட்களில் குடியேற்றுவோம் என சொன்னவர்கள், புலிகளை அழித்துவிட்டோம் என சொல்லி 14 வருடங்கள் கடந்த பின்னரும் எங்களுடைய நிலத்தில் கால்வைப்பதற்கு கூட அனுமதிக்கவில்லை என்பதை இனியும் யாரிடம் சொல்வது?

ஓரு காலத்தில் விவசாயத்தை மட்டுமே அடிப்படை வாழ்வாதாரமாக கொண்டு மீன்பிடி என்பதே என்னn வன்று தெரியாமல் வாழ்ந்த மக்கள் இன்றைக்கு வேறு வழியில்லாமல் மீன்பிடித்து அன்றாட சீவியம் ந டத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

ஆமையன்குளம், தண்ணிமுறிப்பு – மதுரமடு போன்ற பகுதிகளில் உள்ள மானாவாரி காணிகளையும் சிங்கள மக்களுப்பு பறித்துக் கொடுத்துவிட்டார்கள். மனச்சாட்சியே இல்லாத சிங்கள அரசாங்கம் சிங்கள மக்களுக்கு எங்களின் காணிகளை பறித்துக் கொடுக்கிறது.

தமிழ் அரசியல்வாதிகளே இனியாவது வாய் திறந்து எங்களுடைய நிலங்களை மீட்பதற்கு பாராளுமன்றத்திலே வாய் திறவுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )