ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு: கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு: கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் 02 ஆம் திகதி நடைபெறவுள்ளதேசிய மாநாட்டின் போது கட்சியின் முன்னேற்றத்திற்கான பிரேரணைகள் பல நிறைவேற்றப்படவுள்ளதாக கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மாவட்ட மட்டத்தில் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

கட்சியில் கடந்த காலங்களில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமையையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

கட்சியின் நிர்வாக சபை கூட்டத்தில் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )