ஜனாதிபதித் தேர்தலில் ரணில் குதித்தால் சேர்ந்து குதிப்பர்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் குதித்தால் சேர்ந்து குதிப்பர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க பல கட்சிகள் மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தயாராகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, உத்திர லங்கா கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திர ஜனதா சபை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலர் இதில் அடங்குவர் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக இவர்களில் ஒரு குழுவினர் இணைந்து கொள்ளவிருந்த போதிலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக இதுவரை அறிவிக்கப்படாத காரணத்தினால் அவர்கள் அவருடன் இணைந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தற்போது தெரிவிக்கின்றன.

இதன்படி எதிர்வரும் காலங்களில் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி தேர்தல் மேடையில் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )