ரணிலை மொட்டு ஆதரிக்க வேண்டும்

ரணிலை மொட்டு ஆதரிக்க வேண்டும்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்க வேண்டும்.அதன்பின்னர் பாராளுமன்றத் தேர்தல் ஊடாக அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் அரச தரப்பு எம்.பி.யானா உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்திற்கான தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பலமுறை முன்வைத்துள்ள போதும் ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை.

அரசியலமைப்பின்படி ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்தும் சூழலே உள்ளது .இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது .ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்க வேண்டும்.அதன்பின்னர் பாராளுமன்றத் தேர்தல் ஊடாக அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )