
சஜித் ஜனாதிபதியானால் ரணிலுக்கு முக்கிய பதவி
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்குமாக இருந்தால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கிய பதவியை வழங்குவது தொடர்பில் ஆராயலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக் கூறிய ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இதனை கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,
ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த எந்தவொரு எம்.பியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையப் போவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினர்தான் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் அவரை ஆதரித்தால் சஜித் பிரேமதாச ஜனாதிபதியான பின்னர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கிய பதவியை வழங்குவது தொடர்பில் ஆராயலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

