
கார் பந்தயத் தில் கோர விபத்து 7 பேர் பலி ; 21பேர் காயம்
தியத்தலாவையில் இடம்பெற்ற பொக்ஸ் ஹில் கார் மற்றும் மோட்டார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(21) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பந்தயத்தின் போது கார் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி பார்வையாளர் பகுதிக்குள் நுழைந்து விபத்துக்குள்ளானதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் காயமடைந்த சுமார் 21 பேர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
கார் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, அதனைப் பார்க்க முன்வந்த சிலர் பின்னால் சென்ற மற்றுமொரு காருடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

