அரசாங்கத்தில் இருந்து விலகிச் செயற்படும் பீரிஸ் தரப்புடன் கூட்டு சஜித் அணியில் அதிருப்தி

அரசாங்கத்தில் இருந்து விலகிச் செயற்படும் பீரிஸ் தரப்புடன் கூட்டு சஜித் அணியில் அதிருப்தி

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட்ட ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினருடன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்க நடவடிக்கையெடுத்துள்ளமை தொடர்பில் அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க ஊடக சந்திப்பொன்றில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளதுடன், மேலும் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சிக்குள் ஏனைய உறுப்பினர்களுடன் தமது அதிருப்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கலாநிதி நாலக கொடஹேவா, டிலான் பெரேரா, வசந்தயாப்பா பண்டார, கே.பி.குமாரசிறி, உபுல்கலப்பதி ஆகியோர் கூட்டணி அமைக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்த நிகழ்வுக்கு கட்சியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க கலந்துகொண்டிருக்கவில்லை. இந்நிலையில் இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்திய அவர், தனக்கு அது தொடர்பில் நிகழ்வு நடப்பதற்கு 24 மணித்தியாலம் இருக்கும் போதே தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் தான் வேறு நிகழ்வொன்றுக்கு சென்றதால் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும் கட்சி யாருடன் இணைய வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு கூட்டணி அமைப்பவர்கள் மக்கள் நம்பிக்கைகளை கொண்டவர்களாகவும், மக்களால் நிராகரிக்கப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் தவறான மக்களுடன் நாம் இணைந்தால் எந்தவொரு கூட்டணியும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நாங்கள் கட்சித் தலைவருக்கு தெரிவிக்கின்றோம்.

நாட்டை வங்குரோத்து செய்த வியத்மக அமைப்பைச் சேர்ந்தவர்களை கட்சியில் சேர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டுமெனவும் இல்லாவிட்டால் மக்களின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )