ஜனாதிபதித் தேர்தலில் ரணில் நிச்சயம் போட்டியிடுவார்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் நிச்சயம் போட்டியிடுவார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.

ஹட்டன் கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட பின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.

முஸ்லிம் விவகார அமைச்சு, அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து சகல இனங்களுக்குமிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்தார் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி,

அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பிரதேசத்தில் உள்ள ஏனைய மதங்களைச் சேர்ந்த அனைவரும் இணைந்து முஸ்லிம்களுக்கு இப்தார் வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்திருப்பது முன்னுதாரணமான செய்தியாகும்.

இலங்கையின் பன்முகத்தன்மையை பலமாக மாற்ற வேண்டும், பல்வேறு மதங்களையும் கலாச்சாரங்களையும் மதித்து வாழ வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்.

செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலுக்கு அனைவரும் தயாராகி வருகின்றனர்.

பொருளாதார சிக்கலில் இருந்து நாடு மீண்டு வருகிறது, அதை புரிந்து கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் தேவை.

நாடு வீழ்ந்தால் நாட்டின் அனைத்து இனங்களும் வீழ்ச்சியடையும், நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து இனங்களும் ஒன்றிணைய வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார், மேலும் பல வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள், நாடு வீழ்ச்சியடைந்த போது நாட்டை வழிநடத்தியது யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில், தேர்தலுக்குப் பிறகு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர், தேர்தலில் வெற்றி பெற்று நாட்டை முன்னேற்றக் கூடிய ஒருவரை நியமிக்கக் கூடாது.

இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்ற வகையில், கச்சதீவு ஒப்படைப்பு குறித்து ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் பேசி தீர்த்துவைக்கப்பட்ட விஷயத்தை பற்றி பேசவே தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )