
கச்சதீவை இலங்கைக்கு இந்தியா வழங்கவில்லை; பிரித்தானியரே வழங்கிவிட்டுச் சென்றனர்-பேராசிரியர் சந்திமா விஜேகுணவர்த்தன
கச்சதீவு பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் பிரிடிஷ் சிலாேன் என்ற பெயரிலேயே பதிவாகி இருந்தது. பிரித்தானியர் இலங்கையை விட்டு வெளியேறும்போது கச்சதீவை இலங்கைக்கு வழங்கி விட்டு சென்றனர் .எனவே கச்சதீவுக்கும் இந்தியாவுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாதென இலங்கை மனிதநேய கட்சியின் தலைவி பேராசிரியர் சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள இலங்கை மனிதநேய கட்சி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கச்ச தீவு இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டது எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதற்கு வரலாற்று ரீதியில் எந்த ஆதாரமும் இல்லை. கச்சதீவு இலங்கைக்கு இந்தியாவினால் வழங்கப்பட்ட பகுதி அல்ல. அது எப்போதும் இலங்கைக்கு சொந்தமானது . கச்சதீவு இந்தியாவுக்கு சொந்மில்லை என இந்திராகாந்தியே தெரிவித்திருந்தார். இதனை அடிப்படையாகக்கொண்டே கச்சதீவை இந்தியா இலங்கைக்கு வழங்கியதாலே இந்தியாவுக்கு அது சொந்தமில்லை என தெரிவித்ததாக வரலாற்றை மாற்றுகின்றனர்.
கச்சதீவு பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷ் சிலாேன் என்ற பெயரிலேயே பதிவாகி இருந்தது. பிரித்தானியர் இலங்கையை விட்டு வெளியேறும்போது போது கச்சதீவையும் இலங்கைக்கு வழங்கி விட்டே சென்றதாக வரலாற்று புத்தகங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது .
தமிழ் நாட்டில் தேர்தல் நெருங்கும்போது அங்குள்ள அரசியல்வாதிகள் மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொள்வார்கள். அந்தவகையில்தான் தற்போது அங்கு தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கச்சதீவுக்கு உரிமைகோரி அதனை இலங்கையிடமிருந்து மீண்டும் இந்தியா மீட்க வேண்டுமென தமிழ் நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.
அதேபோன்று இந்திய பாராளுமன்றத்திலும் இந்த வி்டயம் தற்போது பேசப்பட்டு வருகிறது. இந்திய பாராளுமன்றத்தில் கச்சதீவு விவகாரம் தொடர்பில் பேசப்படும் விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் எந்த பதிலையும் இதுவரை வழங்கவில்லை
கச்சதீவு தொடர்பாக இந்திய பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்காமல் இருந்தால் எதிர்காலத்தில் கச்சதீவு எமக்கு இல்லாமல் போகும் அயாயம் இருக்கிறது.
இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது அங்கு வாழும் மக்களுக்கு செய்யும் துராேகம். இந்த நிலை தொடர்ந்தால் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் அது பல விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.