ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறை; இரட்டை நிலைப்பாடு

ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறை; இரட்டை நிலைப்பாடு

புத்தரை அவமதிக்கும் வகையில் முறையற்ற கருத்துக்களை கூறிய
நடாஷா எதிரிசூரிய என்ற பெண்ணுக்கு தண்டனை வழங்க முடியது என அறிவித்த நீதிமன்றம் ஞானசார தேரருக்கு 4 வருட கால கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளமை இரட்டை நிலைப்பாடு கொண்டதென தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஆயுர்வேத சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

மதங்களையும்,மத தலைவர்களையும் அவமதிக்கும் வகையில் கருத்துக்களை குறிப்பிடுவதை நிபந்தனையற்ற வகையில் வெறுக்கிறோம்.இருப்பினும் ஒவ்வொரு மதத்தவர்களையும் வேறுப்படுத்தி பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாநடாஷா எதிரிசூரிய என்ற பெண் புத்தரை அவமதிக்கும் வகையில் முறையற்ற கருத்துக்களை குறிப்பிட்டார்.இவரது விவகாரத்தில் நீதிமன்றம் ‘ ஒரு இனத்துக்கோ அல்லது மதத்துக்கோ அல்லது ஒரு குழுவினருக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக மாத்திரம் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் 3 ஆவது உறுப்புரைக்கு மாத்திரமல்ல,தண்டனை சட்டக்கோவையின் 291 (அ) பிரகாரம் கூட நடவடிக்கை எடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் ஞானசார தேரர் விவகாரத்தில் நீதிமன்றம் தண்டனை சட்டக்கோவையின் 291(அ) பிரிவுக்கு அமைய இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு அவரை உட்படுத்தி நான்காண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.இந்த இரட்டை தன்மை பிரச்சினைக்குரியது.

மத நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஞானசார தேரர் கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டப்படுகின்றது..மத முரண்பாட்டை தடுக்கும் வகையில் தான் ஞானசார தேரர் அக்காலப்பகுதியில் செயற்பட்டார்.

‘ வேண்டுமென்றே தான் அவ்வாறான கருத்தை குறிப்பிடவில்லை.தேவையாயின் மன்னிப்பு கோருகிறேன்’ என ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்த நிலையில் தான் அவருக்கு கடூழிய சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நடாஷா எதிரிசூரிய குறிப்பிட்ட கருத்து சமூகத்தின் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஆனால் ஞானசார தேரரின் கருத்து எவ்வித முரண்பாட்டையும் ஏற்படுத்தவில்லை.நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்குட்படுத்தவில்லை.ஆனால் இந்த தீர்ப்பு பௌத்தர்களின் மத்தியின் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )