சுகாதார ஊழியர்கள் ஏப்ரல் 2 முதல் போராட்டம்

சுகாதார ஊழியர்கள் ஏப்ரல் 2 முதல் போராட்டம்

சுகாதார தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தவறியுள்ளமையால் ஏப்ரல் 2 ஆம் திகதி காலை 6.30 மணிமுதல் பொருளாதார நீதிக்கான சுகாதார ஊழியர்களின் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சுக்கு வழங்கிய தொழில்நுட்ப அறிக்கைக்கு 25 நாட்களாகியும் பதிலளிக்கப்படவில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வு காண சுகாதார அமைச்சர் பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இறுதிக்கட்ட விவாதம் தேவையில்லாமல் தாமதமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அபிவிருத்தியின்றி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகள் தடைப்பட்டுள்ளன. நிதியமைச்சின் பதில் தாமதமானமை மற்றொரு வேலைநிறுத்தத்திற்கு ஒரு முக்கிய காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி காலை 6.30 மணி முதல் மீண்டும் நாடு தழுவிய தொடர் வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்க சுகாதார சேவை சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. மகப்பேறு வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள் மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளில் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஆனால் அரசாங்கத்தின் பதில்களின்படி எதிர்காலத்தில் அது குறித்து முடிவு செய்ய சுகாதார தொழிற்சங்க கூட்டணியின் தலைமைக் குழு தீர்மானித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கைக்கு கலந்துரையாடலைத் தவிர்க்கும் தரப்புகளே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதால், அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் இன்று முதல் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தவும், துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கவும் சுகாதார சங்கத் தலைவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தடுக்கும் வகையில் பொறுப்புடன் செயற்படுமாறு வற்புறுத்தி ஏப்ரல் முதலாம் திகதி அனைத்து பிரதான வைத்தியசாலைகளின் முன்பாகவும் எதிர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )