தங்கள் தரப்பை இழுக்கும் முயற்சியால் ரணிலுக்கு குட்டுப் போட்ட மகிந்த

தங்கள் தரப்பை இழுக்கும் முயற்சியால் ரணிலுக்கு குட்டுப் போட்ட மகிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடன்,அக் கட்சித் தலைமையின் அனுமதியின்றி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாகத் தொடர்புகொள்வது குறித்து அக்கட்சி கவலை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவை ஜனாதிபதி சந்தித்த போதே ஜனாதிபதிக்கு இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் அமைப்பாளர்களும் ஜனாதிபதியின் பக்கம் சாய்ந்ததை அடுத்து இத்தகைய கவலைகள் மீண்டும் வலியுறுத்தப்பட்டன.

தற்போது, பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் ஜனாதிபதிக்கு விசுவாசமாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வேட்புமனுவை வழங்குவது குறித்து வெளிப்படையாகவே வாதிடுகிறார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அனைத்து அறிகுறிகளும் சுட்டிக்காட்டுகின்ற போதிலும், பொதுஜன பெரமுன இன்னும் எந்தவொரு முறையான முடிவையும் எடுக்கவில்லை.

தங்கள் கட்சி உறுப்பினர்களுடன், கட்சித் தலைமையின் அனுமதியின்றி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாகத் தொடர்புகொள்வது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னரும் சில சந்தர்ப்பத்திலும் இதேபோன்ற கவலைகளைத் தெரிவித்திருந்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )