இலங்கையர் கொல்லப்பட்டமைக்கு கனடா பிரதமர் இரங்கல்: மிகக் கொடூரமான படுகொலையென அதிர்ச்சி

இலங்கையர் கொல்லப்பட்டமைக்கு கனடா பிரதமர் இரங்கல்: மிகக் கொடூரமான படுகொலையென அதிர்ச்சி

Update – கனடாவின் ஒட்டாவா நகரில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் ஆறு இலங்கைப் பிரஜைகள் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்துக்கு காரணமான சந்தேகநபர் பிரங் டி சொய்சா பற்றிய அதிர்ச்சி விபரங்களை கனடிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அல்கோனிகின் கல்லூரியின் மாணவரான பிரங் டி சொய்சா கடந்த 2023ஆம் ஆண்டில் கடேசியாக கல்லூரிக்கு சென்றுள்ளார் என்பதுடன், கொலை செய்யப்பட்ட குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ஏற்கனவே, ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சந்தேநகர் மீது இருப்பதாகவும் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி இந்த ஆறு பேரையும் இவர் கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

என்ன நோக்கத்திற்காக இந்த படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

எவ்வாறெனினும் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன், எதிர்வரும் 14ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

சுமார் ஒரு மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒட்டாவாவில் இதுபோன்ற படுகொலைகள் அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

நவீன வரலாற்றில் தலைநகரில் நடந்த மிகக் கொடூரமான படுகொலை இது என்று கனேடிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உயிரிழந்த இலங்கை குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update- கனேடிய தலைநகர் ஓட்டாவாவில் வசித்துவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை ஒட்டாவா பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இலங்கையைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குடும்பத்தினர் அண்யைிலேயே கனடாவில் குடியேறியுள்ளனர்.இந்நிலையிலேயே இவ்வாறானதொரு கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 35 வயதுடைய தர்ஷனி பன்பரநாயக்க கம வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகன்யகே,ஏழு வயது இனுகா விக்கிரமசிங்க,நான்கு வயதுடைய அஷ்வினி விக்ரமசிங்க, இரண்டு வயதுடைய ரின்யான விக்கிரமசிங்க,இரண்டரை மாத குழந்தையான கெல்லி விக்ரமசிங்க என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 40 வயதுடைய அமரகோன்முபியாயன்சேலா கெ காமினி அமரகோன் என்பவரும் உயிரிழந்துள்ளார்.

கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு இலங்கையர்கள் சுட்டுக்கொலை; பொலிஸார் தீவிர விசாரணை

கனேடிய தலைநகரின் தெற்குப் பகுதியில் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த அனைவரும் இலங்கையர்கள் என ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

தந்தை உயிர் பிழைத்ததாகவும், ஆனால், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் கூறிய உயர் ஸ்தானிகர், இலங்கையில் உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது இதுவரையில் தெரியவரவில்லை. உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் வயது என்பன தொடர்பில் அதிகாரிகள் தகவல் வெளியிடவில்லை.

புதன்கிழமை இரவு 11 மணியளவில் Barrhaven பகுதியில் உள்ள வீட்டிற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த மரணங்கள் உள்நாட்டு அல்லது நெருங்கிய கூட்டாளி வன்முறையின் விளைவாகும் என்று பொலிஸார் நம்பவில்லை, ஆனால் அவர்கள் இன்னும் சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான உறவைத் தீர்மானிக்க முயற்சிக்கிறார்கள்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )