மகிந்த உட்பட பலர் இன்னமும் தங்கள் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்கவில்லை

மகிந்த உட்பட பலர் இன்னமும் தங்கள் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்கவில்லை

நீதிமன்றம் உத்தரவி;ட்டுள்ள போதிலும் மகிந்த ராஜபக்சவும் பொலிஸ் உயர் அதிகாரி தேசபந்து தென்னக்கோனும் தங்கள் கடவுச்சீட்டுகளை இன்னமும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவி;ல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதல் குறித்த விசாரணைகள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேயின் முன்னிலையில் இடம்பெற்றவேளை மேலதிக சொலிசிட்டர் ஜெனெரல் அயேசா ஜினசேன இதனை தெரிவித்துள்ளார்

மகிந்த ராஜபக்ச உட்பட பலர் தங்கள் கடவுச்சீட்டுகளை இன்னமும் ஒப்படைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தனது வீடு தாக்கப்பட்டவேளை தனது கடவுச்சீட்டு அழிக்கப்பட்டுவிட்டது என ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )