
சாந்தனின் உடலை பார்த்து கதறி அழுத பேரறிவாளனின் தாய்
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடலுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தனுடன் இணைந்து தண்டனைப் பெற்று விடுதலை செய்யப்பட்டவர்களுள் பேரறிவாளனும் ஒருவராவார்.
இந்த வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலையானதில் பாரிய பங்கு அவரது தாயார் அற்புதம்மாளுக்கு உண்டு. பேரறிவாளனின் விடுதலைக்காக அவருடைய தாயார் அற்புதம்மாள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
தற்போது சென்னையில் உள்ள சாந்தனின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலிகளை செலுத்தி வரும் நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் அஞ்சலி செலுத்தியதுடன், சாந்தனின் உடலைக் கண்டு கதறி அழுதுள்ளார்.