
ஜனாதிபதி வேட்பாளராக என்னை நிறுத்தினால் சவாலை சந்திப்பேன்
நாட்டின் முன்னேற்றத்துக்காக பரந்த கூட்டணியொன்றை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பெனவும் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை முன்னிறுத்தினால் சவாலை ஏற்றுக் கொள்வதாகவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பொதுவான உடன்படிக்கைகள் மூலம் அரசியல் கூட்டணியை பேணுவதே நோக்கமாகும் எனவும் அங்கு கூட்டுத் தலைமை உருவாக்கப்பட்டு அதன் கீழ் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டிற்கான ஒருமித்த நடவடிக்கையின் அடிப்படையில் பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதே எனது எதிர்பார்ப்பு. அதில் ஐக்கிய குடியரசு முன்னணி ஒரு பங்காளராகவே செயற்படும். நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி வேட்பாளராக என்னை முன்னிறுத்துமாறு கூட்டுத் தலைமை கோரினால் அந்த சவாலை ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் தெரிவித்தார்.
வரலாற்றில் தாங்கள் எப்போதும் ஒரு பொது நோக்கத்திற்காகவே ஒன்றிணைந்துள்ளதாகவும், தமக்கு என்ன பொறுப்பு கிடைத்தது என்பது முக்கியமல்ல. ஆனால் இம்முறையும் பொதுவான நோக்கத்திற்காக பங்களித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் மிகவும் பொருத்தமானவர் தனது ஆதரவைப் பெறுவார் எனவும் அவர் அதற்கு தகுதியானவர் என்று கூட்டு தலைமை நினைத்தால், சவாலை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.