மீனவர் விவகாரம் ; பேச வாருங்கள் இந்தியாவுக்கு இலங்கை அழைப்பு

மீனவர் விவகாரம் ; பேச வாருங்கள் இந்தியாவுக்கு இலங்கை அழைப்பு

இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பேச்சுக்கள் நடத்துவதற்கு இந்திய அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் தங்கள் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் பரப்புக்குள் ஊடுருவி கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதால் கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாது தொடரும் நிலையில் இங்கு கைது செய்யப்பட்ட பெருமளவு தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்ட போதும்,ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் இலங்கை கடல் பரப்புக்குள் ஊடுருவி கடற்றொழிலில் ஈடுபட்ட சிலர் மீண்டும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.எனினும் அவர்களையும் உடன் விடுவிக்குமாறு தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் கோரி மீன்பிடிக்குச் செல்லாது கால வரையறை அற்ற போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ் விவகாரத்தால், வரலாற்று சிறப்புமிக்க புனித கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் இந்தியாவிலிருந்து பக்தர்கள் இம்முறை வருகை தராது முழுமையாக பகிஷ்கரித்துள்ளதுள்ளனர்.

இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி கூறுகையில்,

இந்திய மீனவர்கள் விடுதலை தொடர்பாக பேசுவதற்காக இந்திய தரப்பிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. இந்தியா தரும் பதிலுக்காக காத்துள்ளோம். இதன் பின்னர் இரு நாட்டு மீனவர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் .

மேலும் கடல் தொழில் அமைச்சு சார்பில் முதலில் பேச்சுவார்த்தை நடைபெறும்.தேவைப்படும் பட்சத்தில் வெளிவிவகாரத்துறையுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்றார் அலி சப்ரி.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )