
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் உயிரிழந்த அனைவரும் புனிதர்கள்; ஏப்ரல் 21ஆம் திகதி அறிவிக்கப்படுவர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடையும் வேளையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, அதில் உயிரிழந்த அனைவரின் பெயர்களும் புனிதர்களாக அறிவிக்கப்படவுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கந்தானை புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்ற மாலை ஆராதனையின் போதே இவ்வாறு குறிப்பிட்ட அவர், அவர்கள் உயிர்த்த ஞாயிறு வழிபாட்டுக்கு வந்ததற்காக உயிர்களை தியாகம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதியுடன் 5 வருடங்கள் நிறைவடையவுள்ளது. அதனால் தாக்குதலில் மரணித்த 273 பெயரையும் புனிதர்களாக உயர்த்துவதற்கு கத்தோலிக்க சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்று அவர்கள் கிறிஸ்துவை நம்பியதால் தேவாலயத்திற்கு வந்தனர். ஏனைய புனிதர்களைப் போல கிறிஸ்துவை நேசித்ததால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர். ஒருவர் தியாகம் செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரே அவரை புனிதர் என்று பெயரிட முடியும்.
எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை இந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி புனிதர்களாக அறிவிப்பதை நோக்கி நகர்வோம். அவர்கள் வீட்டில் இருந்திருந்தால், அவர்கள் இறந்திருக்க மாட்டார்கள். அவர் உயிர்த ஞாயிறு சேவைக்கு வந்ததற்காக தனது உயிரை தியாகம் செய்தனர். நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. நமக்கு நாம் பயப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

