தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் விரைவில் கிடைக்கும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் விரைவில் கிடைக்கும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் விரைவில் வழங்கப்படும். அது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடி தலையீட்டை மேற்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை மற்றும் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான வேலுகுமார் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் கூறுகையில்,

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்.

அந்த வகையில் தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் தொழிலமைச்சருக்கு பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.

அந்த வகையில் நாட்டின் ஜனாதிபதியொருவர் நேரடியாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் தலையிட்டுள்ளமமை இதுவே முதல் தடவை அந்த வகையில் விரைவில் இந்த சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

அதே வேளை, அரசாங்கத்துக்கு சொந்தமாகவுள்ள பெருந்தோட்ட காணிகளை மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். அது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

அந்த வகையில் 4 பில்லியனுக்கும் அதிகமான ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி நிலுவை காணப்படுகிறது. அந்த நிலுவையை செலுத்தாமல் மேற்படி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது திறைசேரி மூலம் அந்த நிலுவையை செலுத்திய பின்னரே மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.அதனால் ஜனாதிபதியின் இணக்கப்பாட்டுடன் நாம் மற்றுமொரு அமைச்சரவைப் பத்திரத்தை தயார் படுத்தி வருகின்றோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )