இமயமலைப் பிரகடனத்துக்கு ஒருபோதும் இணங்கக் கூடாது; தமிழ்ப் பிரிவினைவாதிகள் பிக்குகளின் ஆதரவைப் பெற சூழ்ச்சி

இமயமலைப் பிரகடனத்துக்கு ஒருபோதும் இணங்கக் கூடாது; தமிழ்ப் பிரிவினைவாதிகள் பிக்குகளின் ஆதரவைப் பெற சூழ்ச்சி

இமயமலைப் பிரகடனத்துக்கு ஒருபோதும் இணங்கக் கூடாது எனவும் தமிழ்ப் பிரிவினைவாதிகள் தற்போது பிக்குகளின் ஆதரவை பெறும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளனர் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகளே இந்நாட்டில் ஒற்றையாட்சியின் காவலர்களாக இருந்துவருகின்றனர். அவர்களின் அழுத்தத்தால்தான், இலங்கை சமஷ்டி நாடாவது தடுக்கப்பட்டு வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு பயங்கரமான நிலையை எதிர்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறானதொரு நிலைமையை எதிர்கொள்ளவில்லை. ஜனாதிபதியின் படமொன்று அண்மையில் ஊடகத்தில் வெளியானது.

ஒரு புறத்தில் பிக்குகள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் இருந்தனர். மறுபுறத்தில் உலகத் தமிழ் பேரவை உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.

இமயமலை பிரகடனம் எனக் கூறி பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆறு யோசனைகள் உள்ளன. இலங்கையை சமஷ்டி நாடாக்கி, அதன்மூலம் ஈழத்தை அடைவதே அதன் நோக்கமாகும்.

ஜனாதிபதியை சந்தித்த பின்னர் மகாநாயக்க தேரர்களையும் அவர்கள் சந்தித்துள்ளனர். அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சு நடத்தியுள்ளனர்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் இமயமலை பிரகடனத்துக்கு இணக்கம் என்ற தகவலை தற்போது அவர்கள் பரப்பி வருகின்றனர்.

நாட்டை அவர்கள் பாதுகாத்துவருகின்றனர். நாடு பிளவுபடுவதற்கு எதிராக மகாசங்கத்தினரே செயற்பட்டனர்.ஒற்றையாட்சியைக் காக்க அவர்கள் பெரும் அர்ப்பணிப்புகளை செய்துள்ளனர். மன்னர் காலத்திலும் அவ்வாறு நடந்துள்ளது.

13 ஆவது முழுமையாக அமுல்படுத்த முடியாமல் இருப்பதற்கும் பிக்குகள் அழுத்தம் காரணம். இதனை தெரிந்துதான் பிக்கு சமூகம் தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ளது.அதற்காகவே பிக்கு சமூகத்தின் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

தமிழ்ப் பிரிவினைவாதிகளின் தேவைக்கேற்ப இந்நாடு சமஷ்டி நாடாக மாறாமல் இருப்பதற்கு பிக்குகள் சமூகமே காரணம். எனவே இந்த இமயமலை பிரகடனத்துக்கு இணங்கக் கூடாது .எனவும் கலாநிதி குணதாச அமரசேகர வலியுறுத்தி உள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )