அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்களை வீதிக்கு இறக்கும் காலம் நெருங்கி விட்டது

அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்களை வீதிக்கு இறக்கும் காலம் நெருங்கி விட்டது

அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்காக மக்களை வீதிக்கு இறக்கும் காலம் நெருங்கி வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொழிற்சங்க தலைவர்களை ஒடுக்க நினைத்தால் வேட்டையாட நினைத்தால் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு நடந்ததுதான் நடக்கும். தொழிற்சங்கங்க உறுப்பினர்களின் பின்னால் சென்றாலோ, தொழிற்சங்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலோ நாட்டிலுள்ள தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் அனைவரையும் வீதிக்கு இறக்கி நாட்டை முடக்குவோம். நீங்கள் துள்ள வேண்டாம். முழு நாட்டையும் வீதிக்கு இறக்கி இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதனையும் கூறிக்கொள்கின்றோம்.

இதேவேளை உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை செயற்படுத்த போய் தமது ஓய்வூதியத்தை இல்லாது செய்துகொள்ள வேண்டாம் என்று பொலிஸ் அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )