தமிழர் எவரும் ஒருபோதும் ஜனாதிபதியாக வர முடியாது

தமிழர் எவரும் ஒருபோதும் ஜனாதிபதியாக வர முடியாது

தமிழர் ஒருவர் எவ்வாறு ஜனாதிபதியாக வர முடியும்.? தமிழர்களிடம் எத்தனை வாக்குகள் உள்ளன எனக்கேள்வி எழுப்பிய ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நாட்டில் ஏற்பட்டுள்ள கஷ்டத்தை போக்கியது தற்போது உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே .எனவே எனது ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கே எனவும்கூறினார்.

மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிறுவன பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை மாலை மன்னார் உப்பு உற்பத்தி நிலையத்தில் இடம் பெற்றது.

மன்னார் உப்பு உற்பத்தி நிலையத்தின் முகாமையாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் உப்பு உற்பத்தி நிறுவன அதிகாரிகள் பணிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த உப்பு உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிகின்ற பணியாளர்கள் தொழிலாளர்கள் என 150 பேருக்கு வருடாந்த ஊக்குவிப்புத் தொகை கொடுப்பனவுகள் காசோலைகளாக வழங் கப்பட்டன .

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் ,பேசுகையில்

தமிழர் ஒருவரை ஜனாதிபதியாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.அது முடியாத காரியம்.தமிழர் ஒருவர் எவ்வாறு ஜனாதிபதியாக வர முடியும்.?.ஜனாதிபதியாக தெரிவு செய்ய எத்தனை வாக்குகள் தேவை?தமிழர்களின் வாக்குகள் எத்தனை உள்ளது.

எனவே அதிகமானவர்கள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே தெரிவு செய்வார்கள்.

கடந்த காலங்களில் மக்கள் எதிர் நோக்கிய பிரச்சனை மக்களுக்கு நன்றாக தெரியும்.எனவே மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )