பாதாள உலகக் குழுவின் இருவர் சுட்டுக் கொலை; போதைப்பொருளால் மோதல் ?

பாதாள உலகக் குழுவின் இருவர் சுட்டுக் கொலை; போதைப்பொருளால் மோதல் ?

பாதாள உலகக் குழு உறுப்பினர் ரொஹான் இந்திக்க அல்லது மன்னா ரொஷானும் அவரது சீடர் ஒருவரும் நேற்று திங்கட்கிழமை அதிகாலை இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் பொலிஸாரால் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் பாதுக்க, துன்னான பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் இவர்கள் இருவரும் துன்னான பிரதேசத்தில் உள்ள ஏல விற்பனை நிலையத்திற்கு போதைப்பொருள் விற்பனைக்காக வந்ததாகவும், அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் ஹங்வெல்ல நிரிபொல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கே.டி.ரொஹான் இந்திக (மன்ன ரொஷான்) மற்றும் சுபுன் நிமேஷ் என்ற 30 வயதுடையவருமே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் வாகனத்தினுள் இருந்த போது சிலர் இவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது டுபாயில் இருக்கும் லலித் கன்னங்கர என்பவரிடம் இருந்து போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்காகவே இந்தப் பகுதிக்கு இவர்கள் வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கான பணம் லலித் கன்னங்கரவுக்கு வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அவரது வழிகாட்டுதலின் பேரில் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு வெடிகுண்டு வைத்திருந்த குற்றத்திற்காகவும், ஒரு மாதத்திற்கு முன்னர் ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கியதற்காகவும் மன்னா ரொஷான் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேல்மாகாண தென் பகுதிக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )