நாடு முழுவதும் சுற்றி வளைப்பு நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்

நாடு முழுவதும் சுற்றி வளைப்பு நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையால் சிறைச்சாலைகள் கைதிகளால் நிறைந்துள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சிறைக் கைதிகளின் நத்தார் தின நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தால் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிரிகத்துள்ளது.

இதேவேளை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சிறைகளிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தேவையான சுற்றுநிருபங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி கைதிகள் விளக்க மறியலில் இருக்கும் காலத்தை தண்டனை காலத்துடன் சேர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )