ஜனாதிபதி வாக்குறுதிகளை மறந்துவிட்டார்: ரணிலை சந்திக்க விக்கினேஸ்வரன் எம்.பி மறுப்பு

ஜனாதிபதி வாக்குறுதிகளை மறந்துவிட்டார்: ரணிலை சந்திக்க விக்கினேஸ்வரன் எம்.பி மறுப்பு

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

அதனை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே எனது கருத்தாகும்.

ஆகவே, நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளப்போவதில்லை” என கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )