யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் மரணம்: உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைப்பு

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் மரணம்: உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைப்பு

யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், உடற்கூறுகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடுவில் – கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சண்முகநாதன் துசீந்தினி (வயது 26) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு வருடமே ஆவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுக்கு கடந்த 11ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டது. இதன்போது அவர் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக அவர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் முன்னெடுத்திருந்தார்.

மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் அவரது உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )