கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் பிரதான பூசகர் தலைமறைவு

கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் பிரதான பூசகர் தலைமறைவு

கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் பிரதான பூசகர் மற்றும் களஞ்சியத்திற்கு பொறுப்பாக இருந்த பூசகரும் காணாமல் போயுள்ளனர்.

பாதாள உலக தலைவரான அங்கொட லொக்காவின் மனைவி தனது பிள்ளை நேர்த்திகடனுக்காக கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு காணிக்கையாக செலுத்திய 38 பவுண் எடை கொண்ட தங்க தட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக இவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த சந்தேக நபர்கள் இருவரும் தென் மாகாணத்தில் இருந்து வெளியேறி, வெளி மாகாணம் ஒன்றில் தலைமறைவாக இருப்பதாகவும் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் சட்டத்திரணி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )