
விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை?; குற்றச்சாட்டுக்கு எலான் மஸ்க் பதில்!
The attacks against me should be viewed through a political lens – this is their standard (despicable) playbook – but nothing will deter me from fighting for a good future and your right to free speech
— Elon Musk (@elonmusk) May 20, 2022
எலான் மஸ்க் 2016-ம் ஆண்டு தனி விமானத்தில் பயணித்தபோது, அதில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த பணிப்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்திருக்கிறது.
எலான் மஸ்க் 2016-ம் ஆண்டு தனி விமானத்தில் பயணித்தபோது, அதில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த பணிப்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்திருக்கிறது.
மேலும், இந்தத் தவறை மறைப்பதற்காக 2018-ம் ஆண்டு எலான் மஸ்க்குக்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மூலம் 1.93 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் அந்த செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது.
அனால், இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் எலான் மஸ்க், “நான் கருத்து சுதந்திரம் பற்றிப் பேசி வருகிறேன். இதனால் என்மீது அரசியல் ரீதியான தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆனால், அவர்களெல்லாம் என்னைச் சிறந்த எதிர்காலத்திற்காகப் போராடுவதிலிருந்தும், சுதந்திரம், பேச்சுரிமை குறித்து பேசுவதிலிருந்தும் தடுக்க முடியாது.
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட நான் முனைந்திருந்தால், எனது 30 ஆண்டுக்கால வாழ்க்கையில் இதுவே முதல்முறையாக வெளிச்சத்திற்கு வர வாய்ப்பில்லை. எனவே, என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை இல்லை” என ட்விட்டரில் விளக்கமளித்திருக்கிறார்.