அடக்கு முறைகளிற்கு எதிராக தமிழரசுக் கட்சி ஆர்பாட்டம்

அடக்கு முறைகளிற்கு எதிராக தமிழரசுக் கட்சி ஆர்பாட்டம்

வடகிழக்கில் தமிழ் மக்களின் மீது முன்னெடுக்கப்பட்டுவரும் அடக்குமுறைகளிற்கு எதிராக தமிழரசுக்கட்சியினரால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்துநிலையப்பகுதியில் நேற்று காலை10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடகிழக்கில் நில அபகரிப்புக்கள் நிறுத்தப்படவேண்டும், மயிலத்தமடுமேச்சல் தரையில் ஏற்ப்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றங்களை உடனே நிறுத்து, செட்டிகுளத்தில் கீழ்மல்வத்தோயா திட்டத்தின்மூலம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ள குடியேற்றங்களை தடுத்துநிறுத்து, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வை வழங்கு,இந்து ஆலயங்களை ஆக்கிரமிக்காதே, அவற்றில் விகாரைகளை அமைக்காதே, திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, இஸ்ரேல் காசா மோதலை சர்வதேசம் நிறுத்தவேண்டும் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இந்த ஆர்பாட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், சி.சிறிதரன்,இரா.சாணக்கியன், தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், மாவட்ட அமைப்பாளர் ந.கருணாநிதி,மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )