உணவு பஞ்சத்தை எதிர்நோக்கவுள்ள உலக நாடுகள்: ஐ.நா எச்சரிக்கை

உணவு பஞ்சத்தை எதிர்நோக்கவுள்ள உலக நாடுகள்: ஐ.நா எச்சரிக்கை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூன்று மாதங்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யா, உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தடைப்பட்டுள்ளமையினால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் போரால் விரைவில் உலக நாடுகள் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உணவு பஞ்சத்தை எதிர்நோக்கவுள்ள உலக நாடுகள்: ஐ.நா எச்சரிக்கை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரினால் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருவதாகவும் இது ஏழை நாடுகளில் உணவு பாதுகாப்பின்மையை மோசமாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உக்ரைனில் சமையல் எண்ணெய், கோதுமை, சோளம் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளதுடன், உணவுப்பொருட்களின் விலையும் 30% அதிகரித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )