மட்டக்களப்பில் ஹர்த்தால் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் ஹர்த்தால் முன்னெடுப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினை உட்பட பல விடயங்களை கண்டித்து தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக விடுத்த கோரிக்கைக்கு இணங்க மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (20) பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. நீதிபதி சரவணராஜா மீதான அச்சுறுத்தல்கள்களுக்கு எதிராகவும் நீதியான விசாரணை கோரியும் குறித்த ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு நகரம் உட்பட பல பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன வீதிகளில் ஓரளவான வாகன போக்குவரத்து இடம்பெற்று வருகிறது. பொதுச் சந்தைகள் முற்றாக மூடப்பட்டுள்ளது. அவதானிக்க முடிகிறது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன பெரும்பாலான பாடசாலைகள் இயங்குவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது செங்கலடி ஆரையம்பதி வாழைச்சேனை கொக்கட்டிச்சோலை போன்ற நகரங்களிலும் கடைகள் பெருமளவில் மூடப்பட்டுள்ளன ஹர்த்தால் காரணமாக பெருமளவிலான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவதானிக்க கூடியதாக உள்ளது தெருக்களில் சனநடமாட்டம் மற்றும் மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

களுவாஞ்சிகுடி நகரில் முடங்கிய வர்த்தக நிலையங்கள்…

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )