இராணுவ மற்றும் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுகின்றனர்

இராணுவ மற்றும் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுகின்றனர்

ஹர்த்தாலை அனுஸ்டிக்க வேண்டாம் என இராணுவ மற்றும் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஹர்த்தால் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த அவர், இது புதியவகை அடாவடித் தனமான மற்றும் ஜனநாயக விரோதமான செயற்பாடு என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களின் பூர்வீக நிலங்களை அபகரிப்பதன் ஊடாக வரலாற்றை சிதைக்கும் செயற்பாட்டை தடுத்து நிறுத்தவே இந்த போராட்டத்தை நடத்துவதாக செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

எவ்வாறான தண்டுகள் ஏற்பட்டாலும் அனைத்து தமிழ் பேசும் மக்களும் இதற்கு ஆதரவு தருவார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )