இலங்கைக்கு வந்த இந்திய யுத்த கப்பல்!

இலங்கைக்கு வந்த இந்திய யுத்த கப்பல்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS ‘Airavat’ என்ற யுத்த கப்பலானது நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

124.8 மீற்றர் நீளம் கொண்ட குறித்த கப்பலில் 170 கடற்படை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், அதன் பணியாளர்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து பல பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர் எனவும் நாட்டிலுள்ள சில சுற்றுலாத்தலங்களை பார்வையிடவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )