திடீரென கொழும்பு துறைமுகத்துக்கு வந்த அமெரிக்க கடற்படை கப்பல்

திடீரென கொழும்பு துறைமுகத்துக்கு வந்த அமெரிக்க கடற்படை கப்பல்

அமெரிக்க கடற்படைக் கப்பலான BRUNSWICK நேற்று புதன்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Spearhead-Class Expeditionary Fast Transport வகையின் கப்பலான ‘Brunswick’ 103 மீட்டர் நீளமும், மொத்தம் இருபத்தி நான்கு (24) கடற்படையினரையும் கொண்டுள்ளது மற்றும் ANDREW H PERETTI (Captain ANDREW H PERETTI ) கப்பலின் கட்டளை அதிகாரியாக நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்.

BRUNSWICK  கப்பல் கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் வருகைதந்துள்ளவர்கள் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல உள்ளனர்.

BRUNSWICK கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி இலங்கையில் இருந்து மீண்டும் அதன் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )