இலங்கை தமிழர்களை ஏமாற்றிய சீமான்!; பகிரங்கமாக சவால் விடுத்த பெண்

இலங்கை தமிழர்களை ஏமாற்றிய சீமான்!; பகிரங்கமாக சவால் விடுத்த பெண்

இந்திய குடியுரிமை பெற்றுத் தருவதாக இலங்கை தமிழர்களை சீமான் ஏமாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழர் முன்னேற்றப்படையைச் சேர்ந்த வீரலட்சுமி புகார் கொடுத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறை செயலாளர் அலுவலகத்தில், உள்துறை செயலாளரிடம் வீரலட்சுமி புகார் மனு அளித்துள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்ளை சந்தித்த வீரலட்சுமி, “இந்திய குடியுரிமை பெற்றுத் தருவதாக கூறி இலங்கை தமிழர்களை சீமான் ஏமாற்றியுள்ளார். இப்போது, நல்லவர் போல வேஷம் போடுகிறார்.

எல்லா தேர்தலிலும் சீமானுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது. தேர்தல் செலவுகளை எப்படி பார்த்துக் கொள்கிறார். மேலும் சீமான் தனது மனைவி பெயரில் கொடைக்கானலில் 6.5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இதற்கு பணம் எப்படி வந்தது.
இலங்கை தமிழர்களிடம் இருந்து பணத்தை பறித்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஊழல் என்று பேசும் சீமான், ஜெயலலிதா மற்றும் சசிகலா ஊழலை பற்றி பேசுவாரா? அப்படி பேசினால் தலைமை செயலகத்தின் முன்பு நான் மொட்டை அடித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )