சுமந்திரனை கடுமையாக விமர்சித்த நீதி அமைச்சர்

சுமந்திரனை கடுமையாக விமர்சித்த நீதி அமைச்சர்

நீதித் துறை சுதந்திரம் தொடர்பில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையே சபையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முல்லைதீவு மாவட்ட நீதவானின் பதவி விலகல் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கும் போதே இவர்களுக்கிடையே வாய்தர்க்கம் ஏற்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முதலில் கூறுகையில்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் விவகாரம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத்தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது பதிலளித்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ கூறுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 2022 ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தார். உயர்நீதிமன்றம் பயனற்றது,உயர்நீதிமன்றத்தில் உள்ளவர்கள் வீடு செல்ல வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதேபோன்று பிள்ளையான் வழக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி நவாஸ் கட்டளைப் பிறப்பித்ததாக இவர் குறிப்பிட்டார். பாராளுமன்ற சிறப்புரிமை ஊடாக நீதிமன்றத்தை மலினப்படுத்தினார். இவரை போன்று எவரும் நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தில்லை. இவ்வாறு பேசிவீட்டு இன்று நீதிமன்றத்தின் சுயாதீனம் தொடர்பில் அழுகின்றார்.

சுமந்திரனை போன்று நீதிமன்ற கட்டமைப்பை எவரும் விமர்சித்ததில்லை. வேறு எவராவது இவ்வாறு விமர்சித்திருந்தால் இன்று அந்த நபர் இரண்ட வருட சிறைதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்.

இதனை தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து எழுந்த சுமந்திரன், நான் குறிப்பிட்ட விடயத்துக்கு பொருத்தமற்ற வகையில் நீதியமைச்சர் உரையாற்றுகிறார்.முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் நீதியமைச்சர் முறையாக பதிலளிக்கவில்லை. நான் எதனையோ கேட்க அவர் வேறு ஏதோ பதிலை வழங்குகின்றார். நான் நீதிமன்றத்தை விமர்சித்ததாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிபதிகளின் பெயரை குறிப்பிட்டு நான் உரையாற்றவில்லை என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )