ரணில் மேலும் 5 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும்

ரணில் மேலும் 5 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தகுதியானவர் என ராஜாங்க அமைச்சர்கள் சிலர் அண்மையில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

இதனடிப்படையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன இணைந்து கூட்டணியை உருவாக்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் ராஜாங்க அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக அவர் மேலும் 5 ஆண்டுகள் பதவியில்இருக்க வேண்டும்.

ஜனாதிபதி பதவியில் மாற்றம் ஏற்பட்டால், அந்த வேலைத்திட்டங்கள் இடையில் நின்று போகும்.

இதனால், நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்படக்கூடும்.இந்த விடயங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் ராஜாங்க அமைச்சர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )